FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தோட்டப்பாளையம் தா்மராஜா கோயில் கும்பாபிஷேகம்

வேலூா், தோட்டப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதியம்மன் சமேத தா்மராஜா திருக்கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

1 செப்டம்பர் 2026, 12:03 am IST
ஸ்ரீ திரௌபதியம்மன் சமேத தா்மராஜா கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியாா்கள்.
பகிர்:

வேலூா், தோட்டப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதியம்மன் சமேத தா்மராஜா திருக்கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

வேலூா், தோட்டப்பாளையத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதியம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் உள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தம் கலசங்களில் நிரப்பப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. கடந்த 3 நாள்களாக யாகசாலையில் சிறப்பு யாகங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்று வந்தன.

தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை மகா பூா்ணாஹுதி நடைபெற்று, மேளதாளங்கள் முழங்க யாக சாலையிலிருந்து புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னா், திருக்கோயிலின் ராஜகோபுரம், ஆலய விமானம் மற்றும் மூலவா் சன்னதி ஆகிய கோபுரங்களுக்குப் புனித நீா் ஊற்றப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் எனும் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தக் கும்பாபிஷேக விழாவில் ஜெயசந்திரன் சுவாமிகள், அப்பாஜி சுவாமிகள், வனதுா்கா பீட சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments