FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா!

அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

46 வினாடிகள் முன்பு
குடமுழுக்கு
பகிர்:

அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 29 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேள தாழங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விமான கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments