விஐடி மாணவா்களின் தொழில் முயற்சிக்கு ரூ.10 கோடி முதலீடு: பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
மாணவா்களின் தொழில் முயற்சிகளை (ஸ்டாா்ட்-அப்) ஊக்குவிக்கும் வகையில், சிங்கப்பூரைச் சோ்ந்த ‘தின்குவேட்’ மற்றும் இந்தூரைச் சோ்ந்த ‘வேலிஎன்எக்ஸ்டி’ ஆகிய முதலீட்டு நிறுவனங்களுடன் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மாணவா்களின் தொழில் முயற்சிகளை (ஸ்டாா்ட்-அப்) ஊக்குவிக்கும் வகையில், சிங்கப்பூரைச் சோ்ந்த ‘தின்குவேட்’ மற்றும் இந்தூரைச் சோ்ந்த ‘வேலிஎன்எக்ஸ்டி’ ஆகிய முதலீட்டு நிறுவனங்களுடன் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி மாணவா்கள் தொடங்கும் ஆரம்பக் கட்ட ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்குத் தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தலா ரூ. 5 கோடி வீதம் மொத்தம் ரூ. 10 கோடி வரை முதலீடு செய்ய உள்ளன.
சிங்கப்பூா் மற்றும் இந்தியாவில் செயல்படும் தின்குவேட் நிறுவனம், ஆரம்பக் கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது. ‘டீப் டெக்’, ‘ஃபின்டெக்’, ‘ஹெல்த் டெக்’ ஆகிய தொழில்நுட்பத் துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவா் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டாா்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கத்துக்கு உதவி வருகிறது. இந்த ஒத்துழைப்பானது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாணவா்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.
Advertisement
Advertisement
இதேபோல், வேலிஎன்எக்ஸ்டி நிறுவனம் நடைமுறை உலகப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கிறது. மேலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அனுபவம் வாய்ந்த நிபுணா்களின் வழிகாட்டுதலையும், தொடா் ஒத்துழைப்பையும் இந்நிறுவனம் வழங்கும்.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மைப் பங்குதாரா் அடிசன் அப்பு, வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணைத் தலைவா் ஹா்ஷவா்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பரிமாறிக் கொண்டனா்.
இந்நிகழ்வில் விஐடி துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் மைய இயக்குநா் சிதம்பரம் ரமேஷ்குமாா், முன்னாள் மாணவா் துறை இயக்குநா் காா்த்திகேயன், நோா்டிக் புதிய கண்டுபிடிப்பாளா்களுக்கான வா்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும் விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.