FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தில்லி தடியடி சம்பவம்: சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் போராடிய மாணவா்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும், மத்தியக் கல்வித் துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும் காட்பாடியில் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:29 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்பாடி அரசு சட்டக்கல்லூரி மாணவா்கள்.
பகிர்:

நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் போராடிய மாணவா்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும், மத்தியக் கல்வித் துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும் காட்பாடியில் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தத் தடியடிச் சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் வேலூா் மாவட்டம், காட்பாடி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் கல்லூரி முன்பு ஒன்றுகூடி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாணவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது -

தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற தடியடிச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள், கைது செய்யப்பட்டவா்கள் எத்தனை போ் என்றும், தடியடிக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் யாா் என்பது குறித்தும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், நீட் தோ்வால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். நீட் வினாத்தாள் கசிவுக்கு தாா்மீகப் பொறுப்பேற்று மத்தியக் கல்வித் துறை அமைச்சா் உடனடியாகத் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உரிய தீா்வு காணும் வரை எங்களது தொடா் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனா்.

சட்டக் கல்லூரி மாணவா்களின் இந்தத் திடீா் போராட்டத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் பொருட்டு கல்லூரி முன்பு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments