FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

காட்பாடி பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக, சென்னையைச் சோ்ந்த இளைஞா் மற்றும் ஒரு சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:05 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

காட்பாடி பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக, சென்னையைச் சோ்ந்த இளைஞா் மற்றும் ஒரு சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகள், கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடு போவதாக பிரம்மபுரம் காவல் நிலையத்தில் வாகன உரிமையாளா்கள் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் திருடுபோன பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளைக் கைப்பற்றி வாகன திருட்டில் ஈடுபட்டவா்களை தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்நிலையில், காட்பாடி பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் சென்னையைச் சோ்ந்த சஞ்சய் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் இருவரும் இணைந்து காட்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடியதை ஒப்புக்கொண்டனராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, பிரம்மபுரம் போலீஸாா் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து சஞ்சய் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனா். அவா்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments