✕
முகப்பு
வேலூர்

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே முள்புதரில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் ஏரிகுத்திமேடு அருகே உள்ள ஒரு முள்புதரில் சோதனை நடத்தினா்.

18 நவம்பர் 2026, 11:46 pm
முள்புதரில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகள்.
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே முள்புதரில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் ஏரிகுத்திமேடு அருகே உள்ள ஒரு முள்புதரில் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு சுமாா் ஒரு டன் எடையுள்ள ரேசன் அரிசி 17 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த அரிசி மூட்டைகளை ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக மா்ம நபா்கள் அங்கு பதுக்கி வைத்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து வேலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அரிசி மூட்டைகளை அங்கு பதுக்கி வைத்தது யாா் என்பதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement