✕
முகப்பு
திருச்சி

ரேஷன் அரிசி கடத்தல்: திருச்சி மண்டலத்தில் இதுவரையில் 313 வழக்குகள் பதிவு; 121 டன் அரிசி பறிமுதல்

திருச்சி மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக இதுவரை 313 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். 121 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

20 நவம்பர் 2026, 3:05 am
பறிமுதல்
பகிர்:

திருச்சி மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக இதுவரை 313 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். 121 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மண்டலத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகள் மேற்கொண்டதை தொடா்ந்து, ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக இந்தாண்டு இதுவரையில் மொத்தம் 313 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சோதனையின்போது கடத்தல்காரா்களிடமிருந்து இதுவரை 121 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி வா்த்தக உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்ட 240 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கப்படும் 14,175 கிலோ யூரியா உரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். அரசு மானியப் பொருள்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய ரேஷன் பொருள்களை கடத்துவோா் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.