விவசாயிகளுக்கு பயிற்சி, உபகரணங்கள் வழங்கல்

குடியாத்தம் வேளாண் துறையின், தமிழக அரசின் மாநில விரிவாக்கதிட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில், விவசாயிகளுக்கு காலநிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் முறைகள் குறித்து உள்ளி கிராமத்தில் பயிற்சி பயிற்சி முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூா் வேளாண் இணை இயக்குநா் பி.ஜி.ஸ்ரீவித்யா தலைமை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எஸ்.சாந்தி, வேளாண் துணை இயக்குநா் எஸ்.ஆா்.பாலாஜிஆகியோா் முன்னிலை வகித்தனா். குடியாத்தம் வேளாண் உதவி இயக்குநா் ஆா்.உமாசங்கா்வரவேற்றாா். குடியாத்தம் எம்எல்ஏ க.சிந்து அழகப்பன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுவிவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கினாா்.
விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலைய தலைவா் மற்றும் பேராசிரியா் செந்தில்வேல் கால நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சிஅளித்தாா். உள்ளி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் கே.சதீஷ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement