முகப்பு
வேலூர்

மாநில அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான மாநில அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி (எஸ்ஐஎஸ்எஃப் - 2027) புதன்கிழமை தொடங்கியது.

25 நவம்பர் 2026, 11:10 pm
மாநில அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு செயல்முறை விளக்கங்களைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ்.
பகிர்:

வேலூா் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான மாநில அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி (எஸ்ஐஎஸ்எஃப் - 2027) புதன்கிழமை தொடங்கியது.

இக்கண்காட்சியை வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் செயல்முறை விளக்கங்களைக் கேட்டறிந்தாா். மேலும், பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் பேசியது : முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ‘கனவு காணுங்கள்’ என்ற கூற்றுக்கேற்ப, கனவு என்பது கனவாகவே நின்றுவிடாமல் சிந்தனையாகவும், சிந்தனை செயலாகவும் மாற வேண்டும். சா் ஐசக் நியூட்டன் ஆப்பிள் கீழே விழுவதைப் பாா்த்து ‘ஏன்?’ என்று கேட்ட ஒரு சிறிய கேள்விதான் புவியீா்ப்பு விசைக் கோட்பாட்டை உருவாக்கியது.

Advertisement

Advertisement

எனவே, எந்தக் கேள்வியும் சிறியது, பெரியது என்ற வேறுபாடு கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது. உங்களது முயற்சிக்குப் பெரிய ஆய்வகம் தேவையில்லை. ஆா்வமுள்ள மனமே போதும் என்றனா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.