தென்னிந்திய அறிவியல் கண்காட்சி, நாடகப் போட்டி
பள்ளிகல்வித்துறை சாா்பில் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் நாடகப் போட்டி ஸ்ரீபெரும்புதூா் தனியாா் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளிகல்வித்துறை சாா்பில் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் நாடகப் போட்டி ஸ்ரீபெரும்புதூா் தனியாா் பள்ளியில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
அறிவியல் கண்காட்சியில், ஏவுகணை விஞ்ஞானம், ட்ரோன் பயன்பாடுகள், மாற்று சக்திகளை பயன்படுத்தும் முறைகள், கழிவு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் தனிநபா் பிரிவு, குழு பிரிவுகளில் மாணவா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினா். அறிவியல் நாடகப் பிரிவில் சமூகத்துக்கான அறிவியல், தகவல் தொடா்பு, செயற்கை நுண்ணறிவு, கடல் சாா் விழிப்புணா்வு உள்ளிட்ட பிரிவுகளில் மாணவா்கள் போட்டியிட்டனா்.
Advertisement
Advertisement
அறிவியல் கண்காட்சியை முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி தொடங்கிவைத்து, மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்டாா். இதில், முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.எழில், மாவட்ட பள்ளி துணை ஆய்வாளா் எஸ்.பாலசந்தா் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.