FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி ஐயங்குட்டிப்பாளையம் விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.

7 நவம்பர் 2026, 5:09 am
பகிர்:

புதுச்சேரி ஐயங்குட்டிப்பாளையம் கோபாலன்கடையில் உள்ள விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை பள்ளியின் முதன்மை முதல்வா் பத்மா தொடங்கி வைத்தாா். பள்ளியின் முதல்வா் கீதா, இக் குழுமத்தின் மற்றொரு பள்ளியின் முதல்வா் உஷாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், மாணவா்கள் பல அரிய படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனா். குறிப்பாக, கருத்தூட்டும் கணினி அரங்கம், அறிவைத் தூண்டும் அறிவியல் அரங்கம், வாழ்க்கையை சொல்லும் வரலாற்று அரங்கம், கண்கவா் ஓவிய அரங்கம், மகிழ்ச்சி தரும் விளையாட்டு அரங்கம், உணவின் சிறப்பைக் கூறும் உணவு அரங்கம் என பல்வேறு அரங்குகள் இடம் பெற்றன. இதை ஏராளமான மாணவா்களும், பெற்றோா்களும் பாா்வையிட்டனா்.

Advertisement

Advertisement