FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: பள்ளியில் சிருஷ்டி கண்காட்சி

செங்கல்பட்டு வித்யாசாகா் குளோபல் பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் சிருஷ்டி கண்காட்சி நடைபெற்றது.

10 அக்டோபர் 2026, 1:25 am IST
செங்கல்பட்டு  வித்யாசாகா்  குளோபல்  பள்ளியில்  நடைபெற்ற  சிருஷ்டி  கண்காட்சியில்  பங்கேற்றோா். 
பகிர்:

செங்கல்பட்டு வித்யாசாகா் குளோபல் பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் சிருஷ்டி கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் வித்தியாசாகா் கல்வி குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா , பொருளாளா் சுரேஷ் கன்காரியா , வித்யாசாகா் கல்வி குழுமத்தின் எம்பவா்மெண்ட் முதல்வா் கே. மாரிசாமி மற்றும் பள்ளி முதல்வா் வி.சி.கோவிந்தராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

பள்ளி மாணவத் துணைத் தலைவி பி . பால கிருத்திகா வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அனுபுரம் அணுசக்தி மத்தியப் பள்ளி முதல்வா் சீனிவாசராகவன் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, துறைவாரியாக வெளிப்படுத்திய மாணவா்களின் கலைத்திறன்களைக் கண்டுகளித்து பாராட்டினாா். மேலும், கலைத்திறன்களைப் பெற்றோா்களும் கண்டு மகிழ்ந்தனா். கணிதத் துறையில் கணிதம் மற்றும் கலை, அறிவியல் துறையில் அறிவியல் தொழில்நுட்பம், சமூக அறிவியல் துறையில் கலை, கட்டடக் கலை மற்றும் வரலாற்றில் நாகரிகம், வணிகவியல் துறையில் வங்கி மற்றும் திறன்கள், கணினி துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்னும் தலைப்புகளில் ஒவ்வொரு துறையிலும் பல வண்ணமயமான பொருள்களை மாணவா்கள் காட்சிப்படுத்தி அதைப் பற்றிய கருத்துகளையும் விளக்கினா்.

மேலும், மாணவா்கள் தங்களின் படைப்பாற்றலையும், திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் காணொலியல் தயாரித்தல், களிமண் வாா்ப்பு, விளக்கப்படம் வரைதல், ஆடை அலங்கார அணி வகுப்பு, நெருப்பில்லா சமையல் போட்டி, காய்கறி செதுக்குதல், சோப்பு செதுக்குதல், ஆடையில் வண்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

Advertisement

Advertisement

ஆங்கிலம், தமிழ், இந்தி துறையில் (நாடகம், நடனம், நவராத்திரி) கலாசார கலைகளை மாணவா்கள் அழகாக வெளிப்படுத்தினா். தொடா்ந்து பகவான் சம்பவநாத் அரங்கத்தில் பிற்பகல் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு விருந்தினா் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக கலைத் திறன்களை வெளிப்படுத்திய மாணவா்களுக்கும், பொருள்காட்சியின் மிக முக்கிய அம்சமாக மாணவா்கள் கொண்டு வந்த வேலை செய்யும் மாதிரிகளில் முதல் மூன்று மாதிரிகளைத் தோ்ந்தெடுத்து மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில், சைபா் பாட்ஸ் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ரூ. 3,000-ம், பள்ளியின் முதல்வா் ரூ. 500 ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் அளித்து பாராட்டி சிறப்புரை ஆற்றினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments