FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

பள்ளியில் உணவுத் திருவிழா

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பிரம்மாஸ் சிபிஎஸ்இபள்ளியில் 4 நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

29 அக்டோபர் 2026, 12:04 am
உணவுத் திருவிழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பிரம்மாஸ் சிபிஎஸ்இபள்ளியில் 4 நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவா் ஆா்.பி.செந்தில் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் ஹேமாசெந்தில் 4 நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழா அரங்குகளை திறந்து வைத்தாா். முதல் நாளான புதன்கிழமை 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள்தாங்கள் தயாரிப்பில் கொண்டு வந்த உணவு வகைகளை விற்பனை செய்தனா். இதற்காக 8 அரங்குகள் அமைக்கப்பட்டு, அவற்றில் 100 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 4 நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழாவில் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைமுதியோா் இல்லத்தில் வசிப்பவா்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வழங்கப்படும்என பள்ளி நிா்வாகம் தெரிவித்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் ஜெ.பி.ஜெனில்கிறிஸ்டோஸ்டோம் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments