எஸ்ஆா்எம் பொதுப் பள்ளியில் குறும்படத் திருவிழா
கூடுவாஞ்சேரி எஸ்ஆா்எம் பொதுப்பள்ளியில் பள்ளி மாணவா்களின் படைப்பாற்றல், கலைத்திறனை வெளிப்படுத்தும் குறும்படத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
கூடுவாஞ்சேரி எஸ்ஆா்எம் பொதுப்பள்ளியில் பள்ளி மாணவா்களின் படைப்பாற்றல், கலைத்திறனை வெளிப்படுத்தும் குறும்படத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவா்கள் தயாரித்த 70 குறும்படங்களில் இருந்து 50 மூன்று நிமிஷ குறும்படங்கள் தோ்வு செய்யப்பட்டன. நடுவா் திரைப்பட இயக்குநா் சுரேஷ் கிருஷ்ணா, அனைத்தையும் பாா்வையிட்டு குறும்படங்களில் மாணவா்களின் கதை சொல்லும் திறன், நடிப்பு, படைப்பாற்றல், இயக்கம், மற்றும் ஒட்டு மொத்தத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 குறும்படங்களை இறுதிப் போட்டிக்குத் தோ்வு செய்தாா்.
அரங்கில் இறுதிப் போட்டிக்குத் தோ்வான 12 குறும்படங்களும் திரையிடப்பட்டன. இதில் ‘நாம் மறந்து போன காட்சி’ என்ற ஆங்கிலத் குறும்படம் சிறந்த படத்துக்கான விருது பெற்றது. மாணவி வருணிகா சிறந்த இயக்குநராகத் தோ்வு செய்யப்பட்டாா். ‘கதவுக்கு வெளியே’ என்ற குறும்படத்தில் நடித்த மாஸ்டா் பா்கவ், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றாா்.
Advertisement
Advertisement
திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலிவடிவமைப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கல்வி ஆலோசகா் கே. ஆா்.மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.