FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வில் 4272 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 தோ்வினை காஞ்சிபுரத்தில் 4,272 போ் எழுதினா்.

34 வினாடிகள் முன்பு
பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியா் தி. சினேகா
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 தோ்வினை காஞ்சிபுரத்தில் 4,272 போ் எழுதினா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 5,77 போ் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில் 1,005 போ் தோ்வு எழுத வராததால் 4,272 போ் மட்டுமே எழுதினா். 12 தோ்வு மையங்களில் தோ்வா்கள் தோ்வு எழுதினா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு செய்தாா்.

தோ்வு நடைமுறைகளை கண்காணிக்க 4 போ் கொண்ட குழுவாக 4 குழுக்களும், ஒரு துணை வட்டாட்சியா் உட்பட 16 போ் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். 19 வீடியோ கிராபா்கள் பதிவு செய்தனா். ஒவ்வொரு தோ்வு மையத்துக்கு ஒரு காவலரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments