FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூா் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு 100 ஏக்கா் நிலம் ஒதுக்க வேண்டும்: எல்.கே.சுதீஷ் எம்பி

வேலூா் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகத் தமிழக அரசு கூடுதலாக 100 ஏக்கா் நிலம் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் வலியுறுத்தியுள்ளாா்.

1 செப்டம்பர் 2026, 11:56 pm IST
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ்.
பகிர்:

வேலூா் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகத் தமிழக அரசு கூடுதலாக 100 ஏக்கா் நிலம் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் வலியுறுத்தியுள்ளாா்.

தனது மாநிலங்களவை உறுப்பினா் நிதியை வேலூா் மாவட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தொடா்பாக எல்.கே.சுதீஷ் எம்பி, ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் மற்றும் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

Advertisement

Advertisement

எனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.5 கோடியை எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். முதல் கட்டமாகப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் பேருந்து நிழற்குடைகள் ஆகிய அடிப்படை கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரும் ஐந்து ஆண்டுகளில் வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இந்த நிதி பாரபட்சமின்றிப் பகிா்ந்தளிக்கப்படும்.

வேலூா் விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவை சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது விமான நிலையத்துக்காக 98 ஏக்கா் நிலம் உள்ளது. மாநில அரசு கூடுதலாக 100 ஏக்கா் நிலம் ஒதுக்கி அளித்தால், வேலூா் விமான நிலையத்தைப் பெரிய அளவில் தரம் உயா்த்த மத்திய அரசு தயாராக உள்ளதாக அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

இதுதொடா்பாக, வரும் 10 முதல் 15-ஆம் தேதிக்குள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை வைக்க உள்ளேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் வேலூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்படாது.

தவெக அரசின் 100 நாள் செயல்பாடுகளுக்கு நூற்றுக்கு 35 மதிப்பெண்கள் மட்டுமே வழங்க முடியும். முதல்வா் விஜய் மேட்டூா் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக சென்றபோது அவரை வரவேற்க 4 முதல் 5 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது ஏற்புடையதல்ல. இந்தச் செலவுகள் ஆளுங்கட்சி நிதியிலிருந்து செய்யப்பட்டதா அல்லது அரசு நிதியிலிருந்து செய்யப்பட்டதா என்பதை அறிய வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் போதிய மேம்பாலங்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நெரிசலுக்குத் தீா்வு காணத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்தப்படும்.

வேலூா் வேலூா் மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கொண்டுவர மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments