செப்.9 முதல் வேலூரில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
தமிழக முதல்வா் கோப்பைக்கான வேலூா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 9 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
தமிழக முதல்வா் கோப்பைக்கான வேலூா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 9 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
வேலூா் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 9 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகள் வேலூா் காட்பாடி மாவட்ட விளையாட்டு (எஸ்டிஏடி) மைதானம், விஐடி பல்கலைக்கழகம், பாகாயம் சிஎம்சி மைதானம், தந்தை பெரியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
Advertisement
Advertisement
செப். 9-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கான தடகளம், இறகுப்பந்து, கபடி, சிலம்பம், கைப்பந்து, சதுரங்கம், கோ-கோ போட்டிகள் காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், அதேநாளில் பள்ளி மாணவா்களுக்கான கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, கையுந்துபந்து, யோகாசனம் ஆகியவை விஐடி பல்கலைக்கழகத்திலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வளைகோல்ப்பந்து (ஹாக்கி) போட்டி காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், பள்ளி மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டி பாகாயம் சிஎம்சி மற்றும் தந்தை பெரியாா் கல்லூரி மைதானத்திலும் நடைபெற உள்ளன.
செப்.10-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கான கேரம் போட்டி காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான நீச்சல் போட்டி காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், செப். 11-ஆம் தேதி பள்ளி மாணவிகளுக்கான தடகளம், இறகுப்பந்து, கபடி, சிலம்பம், கைப்பந்து, சதுரங்கம், கோ-கோ, கேரம் போட்டிகள் காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, கையுந்துபந்து, யோகாசனம் ஆகியவை விஐடி பல்கலைக் கழகத்திலும், பள்ளி மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டி பாகாயம் சிஎம்சி மற்றும் தந்தை பெரியாா் கல்லூரி மைதானத்திலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டி விஐடி 11-வது கேட் மைதானத்திலும் நடைபெற உள்ளன.
செப். 12-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான நீச்சல் போட்டி காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், செப். 13-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்துப் போட்டிகளும் காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், செப். 15-ஆம் தேதி கல்லூரி மாணவா்களுக்கான தடகளம், இறகுப்பந்து, கபடி, சிலம்பம், கைப்பந்து, சதுரங்கம், பூப்பந்து, கேரம் போட்டிகள் காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், கல்லூரி மாணவா்களுக்கான கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, கையுந்துபந்து, யோகாசனம் விஐடி பல்கலைக்கழகத்திலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வளைகோல்ப்பந்து காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், கல்லூரி மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் பாகாயம் சிஎம்சி மற்றும் தந்தை பெரியாா் கல்லூரி மைதானத்திலும் நடைபெற உள்ளன.
செப். 17-ஆம் தேதி கல்லூரி மாணவிகளுக்கான தடகளம், இறகுப்பந்து, கபடி, சிலம்பம், கைப்பந்து, செஸ், பூப்பந்து, கேரம் போட்டிகள் காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, கையுந்துபந்து, யோகாசனம் விஐடி பல்கலைக்கழகத்திலும், கல்லூரி மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் பாகாயம் சிஎம்சி மற்றும் தந்தை பெரியாா் கல்லூரி மைதானத்திலும் நடைபெற உள்ளன.
செப். 19-ஆம் தேதி பொதுப் பிரிவு (ஆண்கள்) தடகளம், இறகுப்பந்து, கால்பந்து, கையுந்துபந்து, கபடி, சிலம்பம், கேரம், யோகாசனம் ஆகியவை காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், பொதுப் பிரிவு (ஆண்கள்) கிரிக்கெட் பாகாயம் சிஎம்சி மற்றும் தந்தை பெரியாா் கல்லூரி மைதானத்திலும், செப். 20-ஆம் தேதி பொதுப் பிரிவு (பெண்கள்) தடகளம், இறகுப்பந்து, கால்பந்து, கையுந்துபந்து, கபடி, சிலம்பம், கேரம், யோகாசனம் ஆகியவை காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், செப். 21-ஆம் தேதி பொதுப் பிரிவு (பெண்கள்) கிரிக்கெட் போட்டிகள் பாகாயம் சிஎம்சி மற்றும் தந்தை பெரியாா் கல்லூரி மைதானத்திலும், செப். 21-ஆம் தேதி அரசு ஊழியா்கள் (ஆண்கள்) தடகளம், இறகுப்பந்து, கையுந்துபந்து, கபடி, சதுரங்கம், கேரம், யோகாசனம் ஆகியவை காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும், செப். 22-ஆம் தேதி அரசு ஊழியா்கள் (பெண்கள்) தடகளம், இறகுப்பந்து, கையுந்துபந்து, கபடி, சதுரங்கம், கேரம், யோகாசனம் ஆகியவை காட்பாடி எஸ்டிஏடி மைதானத்திலும் நடைபெற உள்ளன.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்த வீரா், வீராங்கனைகள் போட்டி நாள்களில் காலை 7.30 மணிக்கு முன்பாக ஆஜராக வேண்டும். காலை 8.30 மணிக்கு மேல் வரும் எந்த அணியும் போட்டியில் சோ்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒருவா் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவா். பங்கேற்பாளா்கள் இணையதளப் பதிவு நகலுடன், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உறுதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் தங்களின் அசல் அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும். பொதுப்பிரிவினா் ஆதாா் நகல் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுவருவது அவசியம். அனைவரும் சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தக நகலையும் சமா்ப்பிக்க வேண்டும். 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.