அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவசமாக ரொட்டி விநியோகம்
திருப்பூர், அக். 8: உலக ரொட்டி தினத்தையொட்டி திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் ஆயிரம் பேருக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்பட்டது. திருப்பூர் கேஎஸ்சி பள்ளி சாலையில
திருப்பூர், அக். 8: உலக ரொட்டி தினத்தையொட்டி திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் ஆயிரம் பேருக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்பட்டது.
திருப்பூர் கேஎஸ்சி பள்ளி சாலையில் உள்ள நட்ஸ் அன்ட் பேக்ஸ் சார்பில் நடந்த இந் நிகழ்ச்சிக்கு, திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.என்.கே.கேசவன் முன்னிலை வகித்தார்.
ஆயிரம் நோயாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ரொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதில் நட்ஸ் அன்ட் பேக்ஸ் உரிமையாளர்கள் ரவி, அரவிந்தன் மற்றும் தொழிலதிபர் ஜி.வெங்கடாசலம், கபடி கல்வி அறக்கட்டளை துணைத் தலைவர் கே.ராமதாஸ் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.