உதகை ஹோட்டலில் தீ விபத்து: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
உதகை, அக். 8: உதகை எட்டின்ஸ் சாலையிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக மேல்மாடியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அ
உதகை, அக். 8: உதகை எட்டின்ஸ் சாலையிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக மேல்மாடியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அந்தத் தங்கும் விடுதியின் கீழ்த் தளத்தில் உணவு விடுதியும், சமையலறையும் உள்ளது. மேற்புறத்தில் தங்கும் அறைகள் உள்ளன. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து பரவிய புகை மேல்மாடிக்குச் சென்றுள்ளது.
÷இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துளளனர்.
Advertisement
Advertisement
நகர காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் காவல்துறையினரும் அங்கு விரைந்துள்ளனர்.
÷தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் ஹோட்டல் பணியாளர்களும் இணைந்து மேல்மாடியில் 10 அறைகளில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை அவசரமாக வெளியேற்றினர். இதனால் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தீயும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லையெனவும், தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
÷உதகை நகர போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.