கருமலை குரூப்பில் 20 சதவீத போனஸ்
வால்பாறை, அக். 8: வால்பாறையை அடுத்துள்ள கருமலை குரூப் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். ÷கருமலை குரூப் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினருக்கு கருமலை, அக
வால்பாறை, அக். 8: வால்பாறையை அடுத்துள்ள கருமலை குரூப் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர்.
÷கருமலை குரூப் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினருக்கு கருமலை, அக்காமலை, நடுமலை, வெள்ளமலை உள்ளிட்ட எஸ்டேட்கள் உள்ளன.
இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 2010-11ம் ஆண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தை சனிக்கிழமை காலை கருமலை எஸ்டேட் அலுவலகத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
÷நிர்வாகத் தரப்பில் பொது மேலாளர் சுரேஷ் திவாரி, தொழிற்சங்கத் தலைவர்கள் வி.அமீது (அதிமுக), வி.பி.சிங்காரவேலு (திமுக), கேசவமருகன் (வி.சிறுத்தைகள்), பிச்சை (ஏஐடியுசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
÷பேச்சுவார்த்தை முடிவில் 20 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, வரும் 15ம் தேதி அங்கு பணியாற்றும் சுமார் 2,500 தொழிலாளர்களுக்கு ரூ. 1.5 கோடி தொகையை நிர்வாகத்தினர் வழங்க உள்ளதாக, அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வி.அமீது கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.