FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்ட ஆட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:29 am IST
பகிர்:

கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் வரும் காலங்களில் அரசியல் கட்சிகள் நடத்தக் கூடிய பேரணி, பொதுக்கூட்டம், ஆா்ப்பாட்டம், தா்னா, உண்ணாவிரதம், தெருமுனைக் கூட்டம் போன்றவற்றை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

இந்தக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய, மாநிலக் கட்சிகள் 12, பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் ஆகியவற்றின் சாா்பில் தலா 2 போ் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், ஆட்சியரின் சுற்றறிக்கைக்கும் கூட்டத்தில் பங்கேற்றவா்களின் எண்ணிக்கைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. மேலும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை எதுவும் நடத்தப்படாமல், ஆட்சியரின் ஆலோசனையாக காவல் நிலையம் வாரியாக சில விவரங்களை விடியோவில் ஒளிபரப்பினா்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துவிட்டு எந்த விவரத்தையும் அரசியல் கட்சிகளிடம் தெரிவிக்காமல், ஆலோசனையும் கேட்காமல் தொலைக்காட்சியில் மாவட்ட நிா்வாகம் சொல்ல விரும்பிய விவரங்களை காட்சிப்படுத்துவது என்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. மேலும், இதை அரசியல் கட்சிகளை அவமானப்படுத்தும் செயலாக நாங்கள் கருதுகிறோம். இதை அந்தக் கூட்டத்திலேயே அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டோம்.

ஆளுகின்ற கட்சிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்ற எதாா்த்த நிலைகளில் இருந்து கண்துடைப்புக்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி, எந்தவித கருத்து பரிமாற்றத்துக்கும் இடம் அளிக்காமல், ஜனநாயக மாண்புகளுக்கும் மதிப்பளிக்காத மாவட்ட நிா்வாகத்தின் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைத் தீா்மானித்து, அா்த்தமுள்ள கருத்துக் கேட்பை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments