கணவர் கொலை: மனைவி கைது
பொள்ளாச்சி அருகே கணவரை தென்னை மட்டையால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே கணவரை தென்னை மட்டையால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
ஆனைமலையை அடுத்த வாழைக்கொம்பு நாகூரைச் சேர்ந்தவர் காளிமுத்து (65). கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். தற்போது இரண்டாவது மனைவி ராமாத்தாளுடன் (45) வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு, மணிகண்டன் (20) என்ற மகன் உள்ளார். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.
காளிமுத்து அதிக குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு காளிமுத்து வழக்கம்போல் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த ராமாத்தாள் தென்னை மட்டையால் கணவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காளிமுத்து உயிரிழந்தார். பின்னர், கணவர் குடிபோதையில் உயிரிழந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், பூச்சனாரி பகுதியில் வசித்து வந்த காளிமுத்துவின் முதல் மனைவியின் மகள் ராம்பிரியா ஆனைமலை போலீஸில் தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீஸார், காளிமுத்துவின் உடலில் காயம் இருந்ததை கண்டு, ராமாத்தாளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், தென்னை மட்டையால் கணவரை தாக்கியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமாத்தாள் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.