சூலூர் வட்டார கல்விக்குழுக் கூட்டம்
சூலூர் வட்டார கல்விக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சூலூர் வட்டார கல்விக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சூலூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் மாதப்பூர் பாலு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், சர்வசிக்க்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்தின் மூலமாக சூலூர் ஒன்றியத்தில் கரையாம்பாளையம் பள்ளி கட்டட பராமரிப்பு பணிக்கு ரூ. 6.50 லட்சமும், இருகூர் தெற்குப் பள்ளி கட்டடம் கட்ட ரூ. 20.50 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், ராவத்தூர் அருகே சாலையோரம் பொம்மைகள் விற்கும் வீடில்லா வெளிமாநிலத்தவர்களின் குழந்தைகளை அருகிலுள்ள பள்ளியில் சேர்ப்பது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.