தொழிலாளி அடித்துக் கொலை
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே மர்மமான முறையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே மர்மமான முறையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவை, ஆர்.எஸ்.புரம், பால் கம்பெனி அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர்களது விசாரணையில், கொலையாகிக் கிடந்தவர் டவுன்ஹால், வைசியாள் வீதியைச் சேர்ந்த பெயின்டர் பிரபாகரன் (48) என்பது தெரியவந்தது. இதுகுறித்து, ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.