தொழில்முனைவோர் சங்கம் 3 பேருக்கு விருது
தொழில் முனைவோர் சங்கம் சார்பில் சிறந்த தொழில்முனைவோர் 3 பேருக்கு வெள்ளிக்கிழமை கோவையில் விருது வழங்கப்பட்டது.
தொழில் முனைவோர் சங்கம் சார்பில் சிறந்த தொழில்முனைவோர் 3 பேருக்கு வெள்ளிக்கிழமை கோவையில் விருது வழங்கப்பட்டது.
சர்வதேச அளவிலான தொழில் முனைவோர் சங்கத்தில் சுமார் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உலக அளவில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், மாணவப் பருவம் முதல் தொழில் முனைவோர்களுக்கான தகுதியை வளர்த்துக் கொண்டு செயல்பட்டு வந்த 1,700 பேர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கோவை கிளை சார்பில் ஆண்டுதோறும் புதிய தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, இந்த ஆண்டுக்கான பயோடா தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆனந்த், கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொழில்முனைவோர் விருதும், அம்பிரீ நிறுவன சி.இ.ஓ. ஹேமலதா அண்ணாமலைக்கு சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதும் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.