FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பன்னிமடையில் யானைகள் அட்டகாசம்: குடிசை சேதம்

துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கிராமத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள் குடிசை, நியாயவிலைக் கடை உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தின.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கிராமத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள் குடிசை, நியாயவிலைக் கடை உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தின.

பெ.நா.பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான சின்னத்தடாகம், வரப்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட கிராமப் பகுதிளில் அடிக்கடி யானைகள் புகுந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட குருவம்மாள் கோயில் அருகே உள்ள காலனியில் 6 யானைகள் புகுந்தன.

Advertisement

Advertisement

அந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மயிலாத்தாள் என்பவருக்குச் சொந்தமான குடிசையை இடித்துச் சேதப்படுத்தின. பின்னர், குடிசையினுள் வைக்கப்பட்டிருந்த அரிசியை தின்றன.

அதைத் தொடர்ந்து, திப்பனூர் கிராமத்திற்குள் புகுந்த யானைகள் கூட்டம் அங்கிருந்த நியாயவிலைக் கடையின் ஜன்னலை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசியைத் தின்றன.  பின்னர் அவை, அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளையும் சேதப்படுத்தின. தொடர்ந்து, அதிகாலையில் யானைகள் காட்டிற்குள் சென்றுவிட்டன.

பாதிக்கப்பட்ட மயிலாத்தாள் குடிசையைப் பார்வையிட்ட நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜன் யானைகள் ஊருக்குள் புகுவதைக் தடுக்க பெ.நா.பாளையம் வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments