FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேளாண் உதவி அலுவலர்களுக்கு சட்ட விரோதமாக தனி ஊதியம் நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் புகார்

தமிழகத்தில் தோட்டக்கலை, வேளாண்மைத்துறைகளில் பணியாற்றும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு சட்டவிரோதமாக தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) கோரிக்கை விடுத்துள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தமிழகத்தில் தோட்டக்கலை, வேளாண்மைத்துறைகளில் பணியாற்றும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு சட்டவிரோதமாக தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை செயலருக்கு, சங்கச் செயலர் செந்தில்குமார் அனுப்பியுள்ள புகார் மனு:

தோட்டக்கலை, வேளாண்மைத்துறைகளில் பணியாற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு 5 சதவீதம் தனி ஊதியம், திருந்திய ஊதியம் சட்ட விரோதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை தணிக்கையாளர்களும் கண்டுகொள்ளவில்லை.

Advertisement

Advertisement

இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பணம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோவை, நீலகிரி பொதுத் தகவல் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டோம். இதற்கு கோவை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

ஆனால், தனி ஊதியம், திருந்திய ஊதியம் வழங்கப்படுவதை ரத்து செய்யவும், கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக நீலகிரி தகவல் அலுவலர் விவரம் வழங்கியுள்ளார். எனவே, அரசுப் பணம் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து பல ஆண்டுகளாக முறைகேடு செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த தணிக்கையாளர்கள் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments