FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

168 பள்ளிக் குழந்தைகளைக் கொன்ற தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்கவில்லை! - ஈரான்

மினாப் பள்ளிக்கூடத் தாக்குதலுக்கு அமெரிக்கா இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என கமேனியின் பிரதிநிதி கூறியுள்ளார்...

மினாப் பள்ளிக்கூடத் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதிச் சடங்கு... - கோப்புப் படம்
பகிர்:

ஈரானில், 168 பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா இதுவரையில் மன்னிப்பு கேட்கவில்லை என ஈரான் தலைமை மதகுருவின் இந்திய பிரதிநிதி அப்துல் மஜித் ஹகீம் இலாஹி தெரிவித்துள்ளார்.

தில்லியில், மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தைக் குறிப்பிட்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில், ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் பிரதிநிதி அப்துல் மஜித் ஹகீம் இலாஹி கலந்துகொண்டார்.

இந்த நிலையில், மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதலில் 168 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அரசு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை எனவும், மோஜ்தபா கமேனி உடல்நலத்துடன் இருப்பதாகவும், இலாஹி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“சில நாடுகள் உருவாக்கிய போர்களால் ஈரான் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கில் உள்ள ஏராளமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்.28 ஆம் தேதி மினாப் தொடக்கப் பள்ளியின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி 168 அப்பாவி குழந்தைகளைக் கொலை செய்தனர்.

இன்றுவரை, கொல்லப்பட்ட சில குழந்தைகளின் உடல்கள் கிடைக்கவில்லை. அவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு கல்லறை கூட இல்லாததை நினைத்து அழுகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, எங்களின் தொடக்கப் பள்ளியைத் தாக்கிய இந்தப் பெரும் தவறுக்காக அமெரிக்க அரசு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இதுபோன்ற ஒரு பெரும் துயரம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நாடுகளும் இதுகுறித்து குரலெழுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், கொல்லப்பட்ட முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் ஈரானிய மக்கள் நடத்திய போராட்டங்களில் மோஜ்தபா கமேனி பங்கேற்றதாக இலாஹி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

The United States has not yet apologized for the attack that killed 168 schoolchildren in Iran, said Abdul majid Hakim Elahi, a representative of Iran's Supreme Leader.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments