முகப்பு

ஒப்பந்தம் ஏற்கப்படும் வரை ஈரான் மீது பொருளாதார அழுத்தம் தொடரும்! அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்கா முன்மொழியும் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் ஈரான் மீதான பொருளாதார அழுத்தம் தொடரும் எனத் தெரிவிப்பு...

53 வினாடிகள் முன்பு
ஒப்பந்தம் ஏற்கப்படும் வரை ஈரான் மீது பொருளாதார அழுத்தம் தொடரும்! அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்கா முன்மொழியும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரையில், ஈரான் மீதான பொருளாதார அழுத்தம் தொடரும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் அழுத்தத்தால் ஈரானைச் சுற்றியுள்ள நாடுகள் அந்நாட்டுடனான தங்களது எல்லைகளை மூடியுள்ளன. மேலும், ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்க படைகளின் முற்றுகைகள் தொடர்ந்து வருகின்றன.

இதுபற்றி அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் நேற்று (நவ. 21) செய்தியாளர்களுடன் பேசுகையில்,

Advertisement

Advertisement

“ஈரானின் புரட்சிகர காவல் படையின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்போம், அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு இணங்கத் தயாராகும் வரையில் இந்த அழுத்தம் தொடரும்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், ஈரானைக் குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கிய “ஆபரேஷன் எகானமிக் அவுட்கேஸ்ட்” நடவடிக்கைகள் “வரலாற்றில் ஒரு நாட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதாரத் தனிமை” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது போர்த் தொடுத்தன. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க, இஸ்ரேலிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தின.

மேலும், சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை, ஈரானிய படைகள் முடக்கியதால் பெருமளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது குறிப்பிடத்தக்கது.

summary

economic pressure on Iran will continue until it accepts the agreement proposed by the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.