போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயார், ஆனால்...! - ஈரான்
போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயார் என ஈரான் தெரிவித்திருப்பது குறித்து...
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயார் என ஈரான் தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவர தயார்; ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி செவ்வாய்க்கிழமை (நவ. 10) தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், தற்போது வரை நிரந்தரமாக முடிவுக்கு வராத நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமருடன் கலந்துரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரானுடன் ராணுவ ரீதியிலான போர் முடிவு பெற்றுவிட்டது” என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்றால், அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவித்தல், எரிபொருள் மீதான தடைகளை நீக்குதல் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தடையை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டுமென ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து அப்பாஸ் அராக்ஸி பேசுகையில், “ஈரானுடனான போர் ராணுவ வழிகளாலோ அல்லது தடைகளைத் தீவிரப்படுத்துவதாலோ முடிவுக்கு வராது. தற்போது பரிசீலனையில் உள்ள ஈரானின் கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் நிறைவேற்றுவது மட்டுமே ஒரே தீர்வு” என்று குறிப்பிட்டுள்ளார்.