FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிமுகவினர் உள்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு

வியாபாரிகள் கொடி கட்டுவதைத் தடுத்துத் தகராறில் ஈடுபட்டதாக அதிமுகவினர் உள்பட 20 பேர் மீது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வால்பாறை போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

வியாபாரிகள் கொடி கட்டுவதைத் தடுத்துத் தகராறில் ஈடுபட்டதாக அதிமுகவினர் உள்பட 20 பேர் மீது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வால்பாறை போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 கடந்த ஆண்டு அக்டோபர் 21 இல் வால்பாறையில் சுற்றுலாவை மேம்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடைகளின் முன்பு கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.

 அப்போது, வியாபாரிகள் கொடி கட்டுவதைத் தடுத்து, தகராறில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் சௌந்திரபாண்டியன் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை.

Advertisement

Advertisement

 இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வால்பாறை போலீஸார்,சௌந்திரபாண்டியன் அளித்த புகார் தொடர்பாக அதிமுகவினர் தன்ராஜ், பொன்கணேஷ் மற்றும் அமீது உள்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments