FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுவதாக ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:07 am IST
பகிர்:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுவதாக ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு, மாதாந்திரத் தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும்,  நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து,  தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, கோவை மாவட்ட வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தவணை முறையின் மூலம் மனை, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில், ஏற்கெனவே முழுத் தொகையும் செலுத்தியவர்கள் நீங்கலாக மீதமுள்ள ஒதுக்கீடுதாரர்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற கோவை வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி வட்டித் தள்ளுபடி போக மீதம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்தச் சலுகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments