FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

கோவை மாநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

கோவை மாநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். 
கோவை, போத்தனூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் எஸ்.யாசர் முசாபத் (23). இவர் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும்,  ராமநாதபுரம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்று வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில்,  இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் கடந்த மே 27 ஆம் தேதி அடைக்கப்பட்டுள்ளார். 
இதனிடையே, யாசர் முசாபத் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆய்வாளர் பி.என்.ராஜன்,  மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்திருந்தார். 
இந்தப் பரிந்துரையின்பேரில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments