FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அன்னூரில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

அன்னூரில் காவல்துறை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

அன்னூரில் காவல்துறை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பேரணியை அன்னூர் காவல் நிலையம் முன்பு ஆய்வாளர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரணியில் சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். பேரணி முக்கிய வீதிகள்  வழியாக சென்றது. 
பேரணி முடிவில் ஆய்வாளர் வெங்கடேசன் பேசியதாவது: தலைக்கவசம் அணிவதால் எதிர்பாராமல் விபத்து ஏற்படும்போது வாகனத்தில் செல்வோரின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக  வாகனம்  ஓட்டுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் பொருளாளர் விஜயகுமார், மாரிச்சாமி, அன்னூர் மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் சிற்பி ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments