FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்

இ.எஸ்.ஐ., இ.பி.எஃப். போன்றவற்றில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில்

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

இ.எஸ்.ஐ., இ.பி.எஃப். போன்றவற்றில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருங்கால சேமநல நிதியம், தொழிலாளர் மருத்துவ ஈட்டுறுதி கழகத்துக்கான தொகைப் பிடித்தம் செய்வதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்,  ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.  2009- 10 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சி.ராஜேந்திரன் தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டத் தலைவர் வடிவேல், கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலர் சி.வினோத்குமார், போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments