பொள்ளாச்சியில் விவசாயிகள் பெரு விழா
பொள்ளாச்சி பிஏ கல்லூரியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சி பிஏ கல்லூரியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் விவசாயிகள் பெருவிழாவைத் தொடக்கிவைத்தார். மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, பிஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த உர மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை, தென்னையில் மதிப்புக் கூட்டல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துறை, வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, பட்டு வளர்ச்சி துறை, தோட்டக்கலைத் துறை, கயிறு வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் விளக்கம் அளித்துப் பேசினர். மேலும், இதில் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:
தேங்காய் கொப்பரைக்கு 95 ரூபாய் 21 பைசாவாக ஆதார விலையை உயர்த்திய அரசுக்கும், அதற்காக மக்களவையில் குரல் கொடுத்த மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரனுக்கு பாராட்டுகள். தேங்காய் கொப்பரைக்கு இந்த விலை கிடைத்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை அளிக்கும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.