FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போக்குவரத்துத் துறையில் புதிய செயலி அறிமுகம்: கோவையில் 2 அலுவலகங்களில் சோதனை ஓட்டம்

சூலூர் அருகே மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை சார்பில் புதிய செயலி வாகன் 4 மென்பொருள் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On : 7 ஜூன் 2018, 7:50 am IST
பகிர்:

சூலூர் அருகே மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை சார்பில் புதிய செயலி வாகன் 4 மென்பொருள் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் போக்குவரத்துத் துறை நாடு முழுவதும் ஒரே செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.இது குறித்து சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்திய மூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 142 போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் உள்ளன.இவற்றில் 25 போக்குவரத்துறை அலுவலகங்களிலும், கோவையில் உள்ள 5 அலுவலகங்களில் கோவை தெற்கு மற்றும் சூலூர் போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் இந்த புதிய மென்பொருள் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் தேசிய அளவில் வாகனங்களின் பதிவை எங்கு வேண்டுமானாலும் அறியமுடியும். வாகன உரிமம் மாற்றம் செய்யும்போது புதிய பதிவுச் சான்று வழங்கப்படும். பணிகளை எளிமையாகவும் விரைவாகவும் செய்யமுடிகிறது. இதுவரை கனிணி சர்வர்களை தமிழக அரசு பராமரித்தது. இந்த செயலியை நாடு முழுமைக்கும் மத்திய அரசே பராமரிக்கும். 
போலி பதிவெண்கள் இந்த முறையில் ஒழிக்கப்படும். பதிவெண்கள் ரேண்டம் முறையில் கொடுக்கப்படும். இந்த முறையில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை, ஸ்மார்ட் கார்டு பதிவு சான்று உள்ளிட்ட வசதிகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
புதிய செயலியில் வாகன விற்பனை முகவர்களுக்கு புதிய வாகனங்களின் பதிவை பதிவு செய்யும் வசதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் நாடு முழுமைக்கும் பயன் உள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments