லாரியை கடத்திய இருவர் கைது
லாரியைக் கடத்தியதாக வால்பாறை பகுதியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
லாரியைக் கடத்தியதாக வால்பாறை பகுதியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் அப்பாதுரை (42). இவர் தனியார் லாரி டிரான்ஸ்போர்ட்டில் ஓட்டுநராக உள்ளார். அதே நிறுவனத்தில் கிளீனராக வால்பாறை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (38), மணிகன்டன் (34) ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து சரிவர சம்பளம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட் தொழிற்சாலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு அப்பாதுரை வந்துள்ளார். அப்போது கிளீனராகப் பணியாற்றி நின்ற இருவரும் அப்பாதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கு நின்றிருந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ஷேக்கல்முடி போலீசில் அப்பாதுரை கொடுத்த புகாரின்பேரில் வால்பாறை நகரில் நின்றிருந்த வாரியை பறிமுதல் செய்த போலீஸார், செந்தில்குமார், மணிகன்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.