வீட்டின் கதவை உடைத்து கார் திருட்டு
சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து கார் திருடப்பட்டது குறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து கார் திருடப்பட்டது குறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சூலூரை அடுத்துள்ளது மயிலம்பட்டி ஊராட்சி. இங்கு வசிப்பவர் கமலேஷ் (31). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சுதா(26). இவர் சரவணம்பட்டியில் உள்ள மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கமலேஷ் பயிற்சி வகுப்புக்காக தில்லி சென்றுவிட்டார். இவரது மனைவி சுதா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டைப் பூட்டி விட்டு சேலத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். திங்கள்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்த கார் சாவியை எடுத்து அங்கு நிறுத்தியிருந்த காரை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்துக்கு சுதா தகவல் தெரிவித்தார். காவல் உதவி ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையில் சென்ற போலீஸார் அங்கு விசாரணை செய்தனர்.
மேலும் கைரேகை மற்றும் தடயவியல் சோதனைகளை செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.