கலால் துறையில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி
கலால் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கலால் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, வடவள்ளி, பொம்மனம்பாளையத்தைச் சேர்ந்த என்.எஸ்.கிருஷ்ணசாமி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த புகார் மனு:
எனது மகன் வேதாசுப்பிரமணியம் 2014-ஆம் ஆண்டு பட்டயப் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர், மத்திய அரசின் கலால் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகவும், எனது மகனுக்கு வேலை வங்கித் தருவதாகவும் கூறினார். அதற்கு ரூ. 15 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் நேரிலும், தொலைபேசியிலும் வற்புறுத்தியதன் அடிப்படையில் ரூ. 11 லட்சம் கொடுத்தேன். அதைத்தொடர்ந்து, எனது மகனின் பெயருக்கு கலால் துறையில் வேலையில் சேருவதற்கான நியமன ஆணை, அடையாள அட்டை ஆகியவற்றையும் கொடுத்தார்.
அதன்பின் மாதம் ரூ. 27 ஆயிரம் ஊதியத்தில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும் என கூறி அவரே பயிற்சியும் அளித்தார். இதைக் கேள்விப்பட்ட எனக்குத் தெரிந்த இருவரும் தலா ரூ. 11 லட்சம் கொடுத்துப் பயிற்சியில் சேர்த்தனர். ஆனால், சில மாதங்களில் அவரும், அவருக்கு உதவிய நபரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட நபரை ஏற்கெனவே மோசடி வழக்கில், மாநகரக் குற்றப் பிரிவுக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
எனவே, போலி அரசு நிறுவனம் நடத்தி, பணத்தை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.