நாப்கின் எரிக்கும் கருவி மூலமாக பயன்படுத்திய முகக் கவசங்கள் அழிப்பு
மதுக்கரை பேரூராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை நாப்கின் எரிக்கும் கருவி மூலம் அழிக்கப்படும்
மதுக்கரை பேரூராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை நாப்கின் எரிக்கும் கருவி மூலம் அழிக்கப்படும் பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் துவாரகநாத் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுக்கரை பேரூராட்சியில் தினமும் குப்பைகளுடன் சேகரிக்கப்படும் முகக் கவசங்களைத் தனியாகப் பிரித்து அதை நாப்கின் எரிக்கும் கருவி மூலம் எரித்து வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேகரமாகும் முகக் கவசங்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினரிடம் சேகரிக்கப்படும் முகக் கவசங்கள் என சுமாா் 300 முகக் கவசங்கள் தினமும் எரிக்கப்பட்டு வருகின்றன.
மதுக்கரை பேரூராட்சியில் குப்பைகள் தரம்பிரிக்கும் மையத்தில் நடைபெற்று வரும் இப்பணியை பேரூராட்சிகளின் துணை இயக்குநா் துவாரகநாத் சிங் நேரில் ஆய்வு செய்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.பாா்த்திபன், சுகாதார அலுவலா் திருவாசகம் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.