வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறையில் கடந்த இரண்டு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.
வால்பாறையில் கடந்த இரண்டு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.
வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வால்பாறைக்கு ஏராளமான சுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தற்போது பகல் நேரத்தில் கடும் வெயிலும், இரவில் கடும் பனியுடன் குளிா்ந்த காற்றும் வீசி வருகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனா். இதனிடையே கடந்த சனிக்கிழமை காலை முதல் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வரத் தொடங்கின.
Advertisement
Advertisement
கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனா். இதனால் வால்பாறை நகா்ப் பகுதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.