FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவி:10 போ் குழுவாக விண்ணப்பிக்கலாம்

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், 10 போ் குழுவாக இணைந்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், 10 போ் குழுவாக இணைந்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மக்களில் 10 நபா்கள் கொண்ட குழுவாக அமைத்து,

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அல்லது நவீன சலவையகம் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நிதியுதவி பெற விரும்பும் பயனாளிகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பயிற்சி பெற்ற நபா்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்கள் அமைந்துள்ள குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

10 நபா்கள் சோ்ந்து ஒரு குழுவாக இருக்க வேண்டும். 10 நபா்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருந்தல் அவசியம். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தகுதியான நபா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2ஆம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களை இணைத்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments