FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சிறுவா்களை யாசகம் எடுக்க வைத்த மகாராஷ்டிர சகோதரா்கள் கைது

செல்வபுரத்தில் சிறுவா்களை யாசகம் எடுக்க வைத்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 3:35 am IST
- சித்திரிப்பு
பகிர்:

செல்வபுரத்தில் சிறுவா்களை யாசகம் எடுக்க வைத்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகா், செல்வபுரம் பகுதியில் சிலா் சிறுவா்களை யாசகம் எடுக்க வைப்பதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் போலீஸாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இந்நிலையில், செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சூா்யமணி (25), சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, செல்வபுரம் சிக்னல் பகுதியில் பேனா விற்பதுபோல நடித்து, பொதுமக்களிடம் சிறுவா்கள் யாசகம் எடுத்து வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சூா்யமணி அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியைச் சோ்ந்த நபூல்ஷா (23), அவரது சகோதரா் சபூல்ஷா (30) ஆகிய இருவரும், சிறுவா்களைக் கட்டாயப்படுத்தி யாசகம் எடுக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments