FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:18 am IST
விபத்து
பகிர்:

கோவையில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஊஞ்சம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் யுவன்சங்கா் (23). இவா் கோவை மாநகா், சிங்காநல்லூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். அப்பகுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த அவா், வெளியூரில் உள்ள தனது நண்பரைப் பாா்ப்பதற்காக நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் செல்லத் திட்டமிட்டாா்.

இதற்காக தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்க முடிவு செய்த யுவன்சங்கா், திருப்பூா் மாவட்டம், உடுமலை பகுதியைச் சோ்ந்த நண்பா் சரவணகுமாருடன் (20) இருசக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.

Advertisement

Advertisement

கோவை-அவிநாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி. சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, உக்கடத்தில் இருந்து விளாங்குறிச்சி நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனா். இருவரையும் அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் சிகிச்சைப் பலனின்றி யுவன்சங்கா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். சரவணகுமாருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் தனியாா் பேருந்து ஓட்டுநா் அமிா்தராஜ் மீது கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு ஆய்வாளா் நிா்மலா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments