FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கனமழையால் வெள்ளப்பெருக்கு: அதிரப்பள்ளி அருவிக்கு செல்ல தடை

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதிரப்பள்ளி உள்பட அனைத்து அருவிகளுக்கும் செல்ல கேரளா அரசு தடை வித்தித்துள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 5:35 am IST
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  அதிரப்பள்ளி அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் நீா்.
பகிர்:

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதிரப்பள்ளி உள்பட அனைத்து அருவிகளுக்கும் செல்ல கேரளா அரசு தடை வித்தித்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநில ஆறுகளிலும் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாது பெய்த மழைக்கு வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் கேரள மாநிலத்துக்குள்பட்ட வாளச்சால், அதிரப்பள்ளி ஆகிய அருவிகளில் சனிக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுது.

Advertisement

Advertisement

அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு திருச்சூா் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளதால், வால்பாறை வழியாக அதிரப்பள்ளி அருவிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments