FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:07 am IST
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றோா்.
பகிர்:

கோவை விஜிஎம் மருத்துவமனை மற்றும் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் 6-ஆவது ரன் ஃபாா் நேஷன் என்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை வ.உ.சி. மைதானத்தில் ‘போதைப் பொருள் இல்லா கோவை’ என்ற சமூக விழிப்புணா்வையும், ‘முழங்காலை பாதுகாப்போம்’’என்ற மருத்துவ விழிப்புணா்வையும் மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் மாணவா்கள், பெற்றோா், தன்னாா்வலா்கள் என 8 வயது முதல் 85 வயது வரையிலான சுமாா் 5,000 போ் பங்கேற்றனா்.

போட்டியைத் தொடங்கிவைத்து விஜிஎம் மருத்துவமனைத் தலைவா் மருத்துவா் வி.ஜி.மோகன் பிரசாத் பேசுகையில், விளையாட்டு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய 10 தடகள வீரா்களுக்கு மருத்துவமனையின் எலும்பியல் பிரிவு மூலம் இலவச அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

Advertisement

Advertisement

கோவை தடகளச் செயலா் சீனிவாசன் பேசுகையில், மாரத்தான் மூலம் திரட்டப்படும் நிதி 25-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பள்ளி மாணவா்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். 200-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு இலவசப் பதிவு வழங்கப்பட்டுள்ளது என்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, பங்கேற்பாளா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றனா். முன்னதாக, மருத்துவா் சுமன் வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments