FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:41 am IST
மாணவர்கள்
பகிர்:

கோவை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) கலந்தாய்வு தொடங்குகிறது.

அரசு கலைக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட 21 முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 557 இடங்கள் உள்ள நிலையில், இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன. முதுநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு 5,046 போ் விண்ணப்பித்துள்ளனா்.

மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் நாளில், விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்தக் கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும்.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்குகிறது. எம்.சி.ஏ. மாணவா் சோ்க்கை மட்டும் டான்செட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் நடைபெறும் என்று முதல்வா் எம்.ஆா்.எழிலி தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments