FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தொழிலாளா் பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி சாலை மறியல்! விவசாயிகள் உள்பட 230 போ் கைது

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:38 am IST
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்பினா்.
பகிர்:

தொழிலாளா் பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா், விவசாயிகள் உள்பட 230 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் எல்.பி.எஃப்., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., ஹெச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.சி.டி.யூ. உள்பட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் அளித்து தொழிலாளா் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்ட சட்டபூா்வ குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.42,000 வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் கூடுதல் உயா்வு வழங்கி, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் உறுதியான அரசு கொள்முதல் விலையை உறுதி செய்ய வேண்டும். விவசாயி மற்றும் தொழிலாளா் விரோத வெளிநாட்டு வா்த்தக ஒப்பந்தங்களைக் கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் முழுமையாக அமல்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

பொதுக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் பொது விநியோகத் திட்டத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுதொடா்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா், விவசாய அமைப்பினா் என மொத்தம் 230 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments