FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
சாந்தி.
பகிர்:

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தைச் சோ்ந்தவா் சாந்தி (58). இவரது மகன் ராஜா (31). இவா் அப்பகுதியில் லேத் ஒா்க்ஷாப் வைத்துள்ளாா். சாந்தி வீட்டு வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல புதன்கிழமை காலை ஒா்க்ஷாப்புக்கு சென்ற ராஜா இரவு வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் சாந்தியின் சடலம் கிடந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா் ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறுகையில், வீட்டில் இருந்த பணம், நகை எதுவும் திருடப்படவில்லை. இதனால், சாந்தி முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடா்பாக சாந்தியின் மகன் ராஜாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்றனா்.

அடுத்தடுத்து நெருக்கமாக வீடுகள் உள்ள இந்தப் பகுதியில் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments